லைவ் அப்டேட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 327 ரன்கள் குவிப்பு

டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Update: 2023-06-07 09:04 GMT

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவான இடத்தில் மோதுவது இதுவே முதல் நிகழ்வாகும்.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது 

Live Updates
2023-06-07 17:06 GMT

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட் 146ரன்கள் , ஸ்மித் 95ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்

2023-06-07 16:47 GMT

ஆஸ்திரேலியா அணி 80 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 300 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஹெட் 128 ரன்களுடனும் ஸ்மித் 87 ரன்களுடனும் விளையாடி கொண்டிருக்கின்றனர்.


2023-06-07 15:33 GMT


உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம தொடங்கிய சிறிது நேரத்தில் லாபுசேன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பொறுப்புடன் ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்தார்.

தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து இருவரும் அதிரடியாக ரன்கள் தொடங்கினார்.

சிறப்பாக ஆடிய ஸ்மித் அரைசதம் அடித்தார். தொடர்ந்து டிராவில் ஹெட் சதம் அடித்தார்.

2023-06-07 14:38 GMT

தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 3 விக்கட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 33ரன்கள் , ஹெட் 60ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர்

2023-06-07 13:52 GMT

டிராவில் ஹெட் அரைசதம் அடித்து அசத்தினார் 

2023-06-07 13:42 GMT

ஸ்மித் , டிரேவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை கடந்துள்ளது

2023-06-07 12:20 GMT

ஷமி பந்துவீச்சில் லபுசேன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார் 

2023-06-07 11:34 GMT

உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழந்து 73 ரன்கள் சேர்த்துள்ளது.  லபுசேன் , ஸ்மித் களத்தில் உள்ளனர் 

2023-06-07 11:27 GMT

ஷரதுல் தாகூர் பந்துவீச்சில் டேவிட் வார்னர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்

2023-06-07 11:04 GMT

உமேஷ் யாதவ் வீசிய 15-வது ஓவரில் டேவிட் வார்னர் 4 பவுண்டரிகளை விளாசினார். 


Tags:    

மேலும் செய்திகள்