டி20 உலகக்கோப்பை: விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்க வேண்டும்..? - சவுரவ் கங்குலி பதில்

டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டும்? என்பது குறித்த தனது கருத்தினை சவுரவ் கங்குலி வெளிப்படையாக அறிவித்துள்ளார்

Update: 2024-05-10 16:53 GMT

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட சீனியர் வீரர்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

முன்னதாக டி20 உலக்க்கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைக்காது என்று பேசப்பட்டு வந்த வேளையில் மீண்டும் இந்தியாவிற்காக விளையாட விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் விராட் கோலி எந்த இடத்தில் விளையாட வேண்டும்? என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளத்தில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டும்? என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

" டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலியை துவக்க வீரராக பயன்படுத்துவது அவசியம். அவர் ஓப்பனிங்கில் களமிறங்கினால் மிகச்சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் கடைசியாக அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் சில இன்னிங்ஸ்களே அதற்கு சாட்சியாகும். டி20 உலகக்கோப்பைக்காக தற்போது நாம் சரியான அணியை தேர்வு செய்துள்ளோம். பந்துவீச்சு துறையிலும் இந்திய அணி சிறப்பாக இருப்பதாகவே தோன்றுகிறது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்