டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து - கனடா இன்று மோதல்

பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி, சாத் பின் ஜாபர் தலைமையிலான கனடாவை சந்திக்கிறது.

Update: 2024-06-07 00:27 GMT

Image : ICC / Cricket Ireland

நியூயார்க்,

டி20உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி, சாத் பின் ஜாபர் தலைமையிலான கனடாவை (ஏ பிரிவு) சந்திக்கிறது. அயர்லாந்து தனது தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியிடமும், கனடா, அமெரிக்காவிடம் தோற்று இருந்தது. அதனால் முதல் வெற்றிக்காக இரு அணிகளும் வரிந்து கட்டுகின்றன. இவ்விரு அணிகள் சர்வதேச  டி20கிரிக்கெட்டில் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2-ல் அயர்லாந்தும், 2-ல் கனடாவும் வெற்றி கண்டுள்ளன.

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் (இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணி), இலங்கை- வங்காளதேசம் (நாளை காலை 6 மணி) அணிகள் உள்ளூர் நேரப்படி இன்றிரவு மோதினாலும் இந்திய நேரப்படி மறுநாள் காலையில் தான் போட்டியை பார்க்க முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்