ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்..இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்..?

இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

Update: 2023-11-17 11:40 GMT

கோப்புப்படம்

மும்பை,

இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் நாளை மறுநாள் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்த தொடர் நிறைவடைந்த பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனீயர் வீரர்களான ரோகித், விராட், ராகுல், பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிகிறது. சமீபகாலமாக இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்த்திக் பாண்ட்யா உலகக்கோப்பை தொடரின் போது வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்தார்.

பாண்ட்யாவுக்கு காயம் குணமடைய குறைந்தது இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் ஆட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு, அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் இந்தியாவின் கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்