டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை: ஏற்றம் கண்ட ஜெய்ஸ்வால்...சறுக்கிய ருதுராஜ்

சர்வதேச டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

Update: 2024-07-17 12:28 GMT

image courtesy; @ICC

துபாய்,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டி20 பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டும் (844 புள்ளி), 2வது இடத்தில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (797 புள்ளி), இங்கிலாந்தின் பில் சால்ட் (797 புள்ளி) உள்ளனர். இதையடுத்து 4 மற்றும் 5வது இடங்களில் முறையே பாகிஸ்தானின் பாபர் அசாம் (755 புள்ளி), முகமது ரிஸ்வான் (746 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி காட்டிய இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 இடங்கள் ஏற்றம் கண்டு 743 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து 7வது இடத்தில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (716 புள்ளி) உள்ளார்.

மற்றொரு இந்திய வீரரான ருதுராஜ் கெய்க்வாட்1 இடம் சறுக்கி 684 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார். 9 மற்றும் 10வது இடங்களில் முறையே வெஸ்ட் இண்டீஸின் பிரண்டன் கிங் (656 புள்ளி), ஜான்சன் சார்லஸ் (655 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்