மகளிர் டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.;

Update:2025-03-23 12:41 IST
மகளிர் டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

image courtesy:twitter/@ICC

மவுண்ட் மவுங்கானுய்,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பெத் மூனி 70 ரன்கள் அடித்தார்.

பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் 122 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது.

நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகளும், அலனா கிங் 3 விக்கெட்டுகளும், டர்சி பிரவுன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பெத் மூனி ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வெலிங்டனில் 26-ம் தேதி நடைபெற உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்