கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு..!

மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட் அருகே முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.;

Update:2023-11-01 08:05 IST

மும்பை,

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் அளப்பரிய சாதனைகளை கவுரவிக்கும் விதமாக அவரது சொந்த ஊரான மும்பையில் உள்ள வான்காடே மைதானத்தில், அவரது முழு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட் அருகே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்தியா-இலங்கை இடையிலான ஆட்டம் வரும் 2-ந்தேதி(நாளை) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை சச்சின் டெண்டுல்கரின் சிலை திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்