ஆஸ்திரேலிய அணிக்காக ஒவ்வொரு வாரமும் 100 ஓவர்கள் பந்து வீச தயாராக உள்ளேன் - ஆஸி. முன்னணி வீரர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.;
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்பட்டால் ஒவ்வொரு வாரமும் 100 ஓவர்கள் பந்துவீசவும் தயாரக இருப்பதாக ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரரான நாதன் லயன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எனக்கு அதிக அளவிலான ஓவர்கள் வீச வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பை நோக்கி எதிர்நோக்கி காத்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு வாரமும் அணிக்காக 100 ஓவர்கள் வீச வேண்டும் என்ற தேவை இருப்பின் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அணிக்காக 100 ஓவர்கள் வீசவும் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.