இலங்கை-நியூசிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி: மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது...!

இலங்கை-நியூசிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

Update: 2023-03-28 04:22 GMT

Image Courtesy: @BLACKCAPS

கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ருறு ஆடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டாஸ் போடுவதற்கு முன்னரே அங்கு மழை பெய்ததால் டாஸ் போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 31ம் தேதி ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது. தொடரை இழக்காமல் இருக்க அந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இலங்கை அணி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்