ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணியை அறிவித்த இலங்கை...!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

Update: 2023-12-30 20:02 GMT

Image Courtesy: @ICC

கொழும்பு,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில்  ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 6ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தொடர்களுக்கான பூர்வாங்க அணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தொடர் தொடங்குவதற்கு முன் இந்த பூர்வாங்க அணிகளில் இருந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான முதன்மை அணி இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிகளில் ஒருநாள் அணிக்கு குசல் மெண்டிஸ் கேப்டனாகவும், டி20 அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு சரித் அசலங்கா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் அணி விவரம்; குசல் மெண்டிஸ் (கேப்டன்), சரித் அசலங்கா (துணை கேப்டன்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, சதீரா சமரவிக்ரமா, சஹான் ஆராச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷனகா, காமிந்து மெண்டிஸ், சமிகா கருணாரத்னே, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, தில்ஷன் மதுஷன்கா, துஷ்மந்தா சமீரா, துனித் வெல்லாலகே, பிரமோத் மதுஷன், அசித்தா பெர்னாண்டோ, அகிலா தனஞ்செயா, ஜெப்ரி வான்டர்சே, சாமிக்க குணசேகரா.

டி20 அணி விவரம்; வனிந்து ஹசரங்கா (கேப்டன்), சரித் அசலங்கா (துணை கேப்டன்), பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, தசுன் ஷனகா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, மகேஷ் தீக்சனா, குசல் ஜனித் பெரேரா, பானுகா ராஜபக்சா, காமிந்து மெண்டிஸ், துனித் வெல்லாலகே, அகிலா தனஞ்செயா, ஜெப்ரி வான்டர்சே, சாமிக்க கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, தில்ஷன் மதுஷன்கா, மினுரு பெர்னாண்டோ, நுவான் துஷாரா, பிரமோத் மதுஷன், மதிஷா பத்திரானா. 



Tags:    

மேலும் செய்திகள்