பாக். கிரிக்கெட் வீரருக்கு எதிரான 'ஜெய்ஸ்ரீராம்' முழக்கம்: ட்ரெண்டாகும் '#Sorry_Pakistan'
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் அவுட் ஆகி செல்லும் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.;
அகமதாபாத்
உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய போது, சில ரசிகர்கள் அவரை நோக்கி ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர். இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்த நிலையில்,சமூக வலைத்தளங்களில் '#Sorry_Pakistan' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு, பாகிஸ்தான் வீரர்களிடம் மன்னிப்பு கேட்பதாக '#Sorry_Pakistan' ஹேஷ்டேக்குடன் பதிவிட்டு வருகின்றனர்