'மஞ்சள் ஜெர்சியில் சீக்கிரமே சந்திப்போம்' - தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஜடேஜா டுவீட்...!
சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கேப்டன் கூல் என்றும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும் உலகத்தால் போற்றப்படும் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை மற்றும் என்றென்றும் இவரிடம் எனது பயணம். மஹி பாய் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். விரைவில் மஞ்சள் நிறத்தில் சந்திப்போம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.