புள்ளிப் பட்டியலால் அணியின் தன்மையை விளக்கி விட முடியாது - விராட் கோலி கருத்து
175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.;
ஐபிஎல் 16-வது சீசனில் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் காயம் காரணமாக டு பிளசிஸ் இம்பாக்ட் வீரராக களமிறங்கினர். இதனால் பெங்களூரு அணி கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி (59) மற்றும் பாப் டு பிளசிஸ் (84) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். அவர்களின் அரைசதங்களால் 20 ஓவரில் 174 ரன்களை பெங்களூரு அணி குவித்தது. 175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்று ஆட்டம் முடிந்து கேப்டன் விராட் கோலி, கூறியதாவது:
"புள்ளிப் பட்டியல் ஒரு அணியின் தன்மையை விளக்கி விட முடியாது. 13 அல்லது 14வது போட்டியின் போதுதான் அதை பார்த்து என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வோம்.. நம் எண்ணங்களை அது தீர்மானிக்க முடியாது.
நான் கூறியதெல்லாம் இந்த 174 ரன்கள் தேவைக்கும் அதிகமானது என்றே கூறினேன். டி20 கிரிக்கெட்டில் வெற்றி என்பது விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம்தான் கிடைக்கும். எங்கள் பீல்டிங் நன்றாக இருந்தது" என விராட் கோலி தெரிவித்தார்.