மிரட்டலான சிக்சர் அடித்த சூர்யகுமார்... வியப்புடன் பார்த்து ரசித்த சச்சின்..! வைரல் வீடியோ.!

சூர்யகுமாரின் அதிரடி ஆட்டத்தால், மும்பை அணி குஜராத்தை வென்றது.

Update: 2023-05-13 07:34 GMT

மும்பை,

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் தனது அபார பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், சதம் அடித்து அசத்தினார்.

அவர் தனது வழக்கமான பாணியில் பந்தை நாலாபுறமும் பவுண்டரிக்கு பறக்கவிட்டார். அவரது ஆட்டத்தை மைதானத்தில் இருந்த அனைவரும் ரசித்ததுடன், மும்பை இன்னிங்ஸ் முடிவடைந்ததும், குஜராத் வீரர்கள் அனைவரும் சூர்யகுமார் யாதவை பாராட்டினர்.

குறிப்பாக அவரது அதிரடி ஆட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வியப்புடன் பார்வையிட்டார். முகமது ஷமி வீசிய ஒரு கடினமன பந்தை எதிர்கொண்ட சூர்யகுமார், தனது பேட்டை வளைத்து தேர்ட் மேன் திசையில் சிக்சருக்கு பறக்கவிட்டார். இந்த சிக்சரை ஆச்சர்யத்துடன் பார்வையிட்ட சச்சின், அருகில் இருந்த பியூஸ் சாவ்லாவிடம் அந்த ஷாட்டை எவ்வாறு அடித்தார் என்பதை சைகை மூலம் தெரிவித்தார்.

சூர்யகுமாரின் அந்த சிக்சரை சச்சின் வியப்புடன் பார்த்து, சைகையுடன் பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்