கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் 179 ரன்கள் குவிப்பு...!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் 179 ரன்கள் குவித்துள்ளது.

Update: 2023-05-08 15:57 GMT

கொல்கத்தா,

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வரும் 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன்சிங் களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் எடுத்த பிரப்சிம்ரன்சிங் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்துவந்த பனகா ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் முலம் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய இயம் லிவிங்ஸ்டன் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 21 ரன்னில் அவுட் ஆனார். சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்துவந்த சாம் கரன் 4 ரன்னிலும், ரிஷி தவான் 19 ரன்னிலும் அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாருக் கான் 8 பந்துகளில் 21 ரன்களுடனும், ஹர்பிரீத் 9 பந்தில் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

கொல்கத்தா தரப்பில் அந்த அணியின் வருண் சக்ரவர்த்தி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்க உள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்