இது என்னடா கூத்து...! மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு திடீர் தடை...!
சென்னை அணிகள் மோதும் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு வான்கடே மைதானத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற தகவல் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது;
மும்பை :
ஐபிஎல் வரலாற்றில் அதிக சாம்பியன்ஸ் டிராபிகளை வென்ற இரு அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முதல் முறையாக இந்த ஐபிஎல் தொடரில் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியைத்தான் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியை காண ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்
இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.ஆனால் இந்த போட்டியில் மும்பை அணிக்கு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நீதா அம்பானி முடிவு செய்துள்ளது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் சாம்பியன்ஸ் டிராபியை மும்பை 5 முறையும், சென்னை 4 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 5 கோப்பைகளை வென்ற மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், 4 முறை வென்ற சென்னை அணிக்கு தோனி கேப்டனாகவும் இருந்துள்ளனர். இதனால் இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
தோனிக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம் உண்டு. கடந்த முறை மும்பையில் இரு அணிகளும் விளையாடிய போது, சென்னை அணி ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மும்பை வான்கடே மைதானமே மஞ்சள் நிறத்தில் காட்சி அளித்தது. இதே போன்று ஆர்சிபி விளையாடும் அட்டத்திற்கும் விராட் கோலி ரசிகர்கள் மும்பையை ஆக்கிரமித்து விட்டார்கள்.
இதனால் நிடா அம்பானி, தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் மற்ற ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டம் போட்டு உள்ளார். அதன் படி, மும்பை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக அந்த மைதானத்தில் இரண்டு கேலரிகளை நிதா அம்பானி முன்பதிவு செய்துள்ளார். அந்த கேலரியில் மும்பை அணி ரசிகர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளது. அந்த கேலரியில் சிஎஸ்கே உள்ளிட்ட ரசிகர்கள் அமர அனுமதிக்கப்படவில்லை.
மும்பை ரசிகர்கள் மண்டல பகுதியில் வெறும் மும்பை அணி ஜெர்சியை மட்டும் தான் அணி தான் வர வேண்டும் என்றும், வேறு அணி ஜெர்சியை அணிந்து வரக் கூடாது என்றும் வேறு நிறத்தில் டிசர்ட் போடக்கூடாது என்று மும்பை அணி நிர்வாகம் கூறியுள்ளது.
இதன் மூலம் மும்பையில் நடைபெறும் ஐபில் போட்டியை மற்ற அணி ரசிகர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மற்ற அணி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.