நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் விலகல்..!
காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிருந்து இந்திய அணியின் ஷ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளார்;
ஹைதராபாத்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் நாளை (18-ந் தேதி) நடக்கிறது.
இந்த நிலையில் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிருந்து இந்திய அணியின் ஷ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அணியில் ரஜத் படிதார் சேர்க்கப்ட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன் , விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்,கே.எஸ் . பரத் , ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரஜத் படிதார், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக்.