ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு...!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.;

Update: 2023-05-30 12:56 GMT

Image Courtesy: ICC Twitter 

கொழும்பு,

உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி சர்வதேச அணிக்காக ஆட உள்ளனர். இந்நிலையில் ஜூன் 2ம் தேதி முதல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தசுன் ஷனாகா தலைமையிலான அந்த அணியில் மலிங்காவை போல் பந்துவீசும் மதீஷா பதிரானா, மகேஷ் தீக்சனா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

முதல் இரு ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி விவரம்:-

தசுன் ஷனாகா (கேப்டன்), குசல் மெண்டிஸ், பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, அஞ்லோ மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, துசன் ஹேமந்தா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, மதீஷா பதிரானா, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.

Tags:    

மேலும் செய்திகள்