நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : கடைசி நாளில் பாகிஸ்தான் வெற்றி பெற 319 ரன்கள் தேவை

.4வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Update: 2023-01-05 13:45 GMT

கராச்சி,

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிமுதல் இன்னிங்சில் 131 ஓவர்களில் 449 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா, அகா சல்மான் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 407 ரன்கள் எடுத்தது. ஷகீல் 124 ரன்களும் , அப்ரார் அகமது ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று 4வது நாள் ஆட்டம் நடந்தது.தொடக்கத்தில் அப்ரார் அகமது ரன் எதுவும் எடுக்கலமல் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனை தொடர்ந்து 41 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் விளையாடியது.தொடக்கத்தில் ரன் எதுவும் எடுக்காமல் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடிய டாம் லாதம் அரைசதம் அடித்து 62 ரன்களில் வெளியேறினார் . அடுத்து கேன் வில்லியம்சன் ரன்களும் டாம் பிளெண்டல் , பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இறுதியில் 83 ஓவர்களுக்கு 273 ரன்கள் எடுத்தபோது நியூசிலாந்து அணி டிக்ளேர் செய்தது . இதனால் பாகிஸ்தான் அணிக்கு 319 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக் , மிர் ஹம்சா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.4வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்