புதிய பயிற்சியாளர்கள் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டுள்ளனர் - ரோகித் சர்மா

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி சென்னையில் தொடங்குகிரது.;

Update:2024-09-17 17:26 IST

Image Courtesy: AFP 

சென்னை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதிய பயிற்சியாளர்கள் வித்தியசமாக அணுகுமுறையை கொண்டுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது,

டிராவிட், விக்ரம் ரத்தோர் (முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர்), மற்றும் பராஸ் மாம்ப்ரே (முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர்) ஆகியோர் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ஒப்பிடும்போது கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியைக் கொண்டுள்ளனர்.

ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல புரிதல்தான் முக்கியம். கம்பீரிடம் அது இருக்கிறது. நாட்டிற்காக விளையாடும் போது ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. வங்காளதேசத்திற்கு எதிரான தொடர் ஆஸ்திரேலியா தொடருக்கான ஒத்திகை அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்