நேபாளம் அபார பந்துவீச்சு...தென் ஆப்பிரிக்கா 115 ரன்கள் சேர்ப்பு

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரீசா ஹென்றிக்ஸ் 43 ரன்கள் அடித்தார்.

Update: 2024-06-15 01:16 GMT

Image Courtesy: @CricketNep

செயின்ட் வின்சென்ட்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் செயின்ட் வின்சென்ட் இன்று நடைபெற்று வரும் 31-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நேபாளம் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் டி காக் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டி காக் 10 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய மார்க்ரம் 15 ரன், கிளாசென் 3 ரன், மில்லர் 7 ரன் எடுத்த நிலையிலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஹென்றிக்ஸ் 43 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் மார்கோ ஜான்சென் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரீசா ஹென்றிக்ஸ் 43 ரன்கள் அடித்தார். நேபாளம் தரப்பில் குஷால் புர்டெல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்