இளம் கிரிக்கெட் வீரருக்கு தன் பைக்கில் லிப்ட் கொடுத்த தோனி - வைரல் வீடியோ
தோனி தனது ஆர்எக்ஸ் 350 பைக்கில் இளம் கிரிக்கெட் வீரருக்கு லிப்ட் கொடுத்தார்.
ராஞ்சி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. சமீபத்தில் அமெரிக்கா சென்ற தோனி கால்ப் விளையாட்டு மைதானத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார்.
அந்த வகையில் இளம் கிரிக்கெட் வீரருக்கு தோனி தன் பைக்கில் லிப்ட் கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி பயிற்சி முடிந்த பின் தன்னுடன் பயிற்சியில் ஈடுபட்ட இளம் கிரிக்கெட் வீரருக்கு பைக்கில் லிப்ட் கொடுத்துள்ளார்.
ஹெல்மெட் அணிந்தவாறு தோனி தனது ஆர்எக்ஸ் 350 பைக்கில் அந்த இளம் வீரரை ஏற்றிக்கொண்டு ராஞ்சி சாலையில் பயணம் செய்துள்ளார். அந்த பைக் பயணத்தை இளம் வீரர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.