நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம்...சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்ற சூர்யகுமார் யாதவ்...!
உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.;
பெங்களூரு,
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 9வது வெற்றியை பதிவு செய்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறந்த பீல்டருக்கான விருதை அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் கைப்பற்றினார்.