காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து மதீஷா பதிரனா விலகல்.!

காயம் காரணமாக இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரனா விலகியுள்ளார்.;

Update: 2023-10-24 11:26 GMT

மும்பை,

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவேச்சாளர் மதீஷா பதிரனா காயம் காரணமாக விலகியுள்ளார். ஏற்கெனவே சமீரா மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகிய இரு சிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இலங்கை தற்போது விளையாடி வருகிறது.

சமீபத்தில், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியின் கேப்டன் தசுன் ஷனகா உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில், பதிரனாவும் காயம் காரணமாக விலகியுள்ளது இலங்கை அணிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பதிரனாவுக்கு மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்