முதல் 10 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது - இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ்

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதின.;

Update: 2023-11-10 02:17 GMT

Image Courtesy: AFP

பெங்களூரு,

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இலங்கை நிர்ணயித்த 172 ரன் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 172 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின்னர் இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ் கூறியதாவது,

முதல் 10 ஓவர்களிலேயே நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்தோம். அதுதான் எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதை சரி செய்திருந்தால் எளிதாக இந்த பிட்ச்சில் 300 ரன்கள் அடித்திருப்போம். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் விக்கெட் வீழ்த்துவது கடினமாக இருந்தது. நாங்கள் குறைந்த இலக்கை மட்டுமே நிர்ணயித்தோம்.

இத்தொடரில் எனக்கு கிடைத்த கேப்டன்ஷிப் பதவியை மகிழ்ச்சியாக செய்தேன். ஆனால் என்னுடைய சொந்த செயல்பாடுகளில் ஏமாற்றத்தை சந்தித்தேன். மொத்தத்தில் இத்தொடரில் மகிழ்ச்சியாக விளையாடினேன். எங்களுடைய சில வீரர்கள் இத்தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்