இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததால் ரோகித் சர்மாவை மோசமான கேப்டனாக கூற முடியாது - ஆஸி. முன்னாள் வீரர்

அண்மையில் இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

Update: 2023-06-19 11:55 GMT

Image Courtesy: @ICC

மெல்போர்ன்,

அண்மையில் இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து பலரும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சரியில்லை என கருத்துக்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் எனக்கு பிடிக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றுவிட்டது என்பதாலயே ரோகித் சர்மா இந்திய அணியை தலைமை தாங்க சரியான ஆள் இல்லை என கூற முடியாது.

ரோகித் சர்மா ஒரு நல்ல கேப்டன். அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை எனக்கு பிடிக்கும். அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்