வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி- இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை...!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2022-08-09 04:28 GMT

லாடெர்ஹில்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அமெரிக்காவின் லாடெர்ஹில்லில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. இதில் இந்தியா நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 15.4 ஓவர்களில் 100 ரன்னில் சரண் அடைந்தனர்.

டாப்-3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

அக்சர் படேல், குல்தீப் யாதவ், தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். இதன் மூலம், சர்வதேச டி20 வரலாற்றில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவது இதுவே முதல்முறை என்ற சாதனையை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்