குர்ணால் பாண்டியா சிறப்பாக பந்து வீசினார் - கேப்டன் கே.எல்.ராகுல் பாராட்டு
அணியில் ஒவ்வொருவரும் வித்தியாசமாக விளையாடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.;
லக்னோ,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை லக்னோ அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன்களே எடுத்தது. பின்னர் விளையாடிய லக்னோ 16 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி ஆல்-ரவுண்டர் குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தி. பேட்டிங்கில் 34 ரன்கள் எடுத்தார். லக்னோ 2-வது வெற்றியை (3 ஆட்டம்) பெற்றது. ஐதராபாத் தான் மோதிய இரண்டு ஆட்டத்திலும் தோற்றது. வெற்றி குறித்து லக்னோ அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:
இந்த ஆடுகளம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே உணர்ந்து இருந்தோம். அதில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அதை முதல் 2 ஓவர்களிலேயே பார்த்தோம். பவர் பிளேயில் குர்ணால் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசுவார் என்று எனக்கு தெரியும். அது போலவே அவர் சிறப்பாக பந்து வீசினார். இரண்டு வெற்றிகளும் கடின உழைப்பால் கிடைத்தது. அதில் வெவ்வேறு சவால்கள் இருந்தன. அணியில் ஒவ்வொருவரும் வித்தியாசமாக விளையாடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.