ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு...!

இன்றைய லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

Update: 2023-04-14 13:36 GMT

கொல்கத்தா,

16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடர் இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, ஐபிஎல் தொடரின் இன்று நடக்கும் 19வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்ற கொல்கத்தா அணி அடுத்த இரு ஆட்டங்களில் (பெங்களூரு மற்றும் குஜராத்துக்கு எதிராக) வெற்றி பெற்றது.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோவிடம் உதை வாங்கியது. அதைத் தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான மோதலில் எழுச்சி பெற்ற ஐதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதே உத்வேகத்துடன் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்