ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 15 ஆண்டுகளுக்கு பின் சதத்தை பதிவுசெய்த கொல்கத்தா அணி.!

வெங்கடேஷ் அய்யர் சதமடித்ததை அடுத்து ஐபிஎல்-ல் 15 ஆண்டுகளுக்கு பின்னர் கொல்கத்தா அணி சதத்தை பதிவுசெய்துள்ளது.;

Update: 2023-04-16 15:24 GMT

மும்பை,

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. கொல்கத்த அணி தரப்பில் வெங்கடேஷ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக பிரண்டன் மெக்கல்லம் சதம் அடித்திருந்தார். அதன் பிறகு 15 ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்காக எந்த ஒரு பேட்ஸ்மேனும் சதம் அடிக்கவில்லை.

இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணிக்காக வெங்கடேஷ் அய்யர் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் 15 ஆண்டுகளாக சதத்தை பதிவுசெய்யாத அணி என்ற மோசமான சாதனைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்தது.

 

Tags:    

மேலும் செய்திகள்