உலக கோப்பை மைதானங்களை ஆய்வு செய்ய பாகிஸ்தான் பாதுகாப்பு குழு இந்தியா வர உள்ளதாக தகவல்

உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது.

Update: 2023-07-01 10:35 GMT

லாகூர்,

அகமதாபாத், இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. அந்த எட்டு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும்.

அந்த எட்டு அணிகளை தவிர்த்து எஞ்சிய இரு இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்வதற்காக தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இதிலிருந்து இரு அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய இடங்களை ஆய்வு செய்ய பாகிஸ்தான் பாதுகாப்பு குழு இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி செல்ல அரசாங்கம் அனுமதி வழங்குவதற்கு முன்பு மைதானங்களை ஆய்வு செய்வதற்காக அக்குழு அனுப்பப்பட உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பாதுகாப்பு குழுவை இந்தியாவுக்கு எப்போது அனுப்புவது என்பதை வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும். பாகிஸ்தான் விளையாடும் இடங்கள் மற்றும் அணிக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு, பிற ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதித்துவத்துடன் பாதுகாப்பு குழு இந்தியா செல்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்