இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: அயர்லாந்து அணி அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.;

Update: 2023-08-05 03:20 GMT

Image Courtesy: @ICC

டப்ளின்,

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணிக்கு திரும்பி உள்ள பும்ரா கேப்டனாகவும், ருதுராஜ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் ரோகித், கோலி, பாண்ட்யா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக ஆட உள்ள அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த அணியில் ஜோஷ் லிட்டில், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடெர் போன்ற இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அயர்லாந்து அணி விவரம்:

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, மார்க் அடேர், ராஸ் அடேர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், பியோன் ஹேண்ட், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், தியோ வான் வொர்காம், பென் ஒயிட், கிரேக் யங்.

போட்டி அட்டவணை:

முதல் டி20 போட்டி: ஆகஸ்ட் 18

2வது டி20 போட்டி: ஆகஸ்ட் 20

3வது டி20 போட்டி: ஆகஸ்ட் 23



Tags:    

மேலும் செய்திகள்