ஐபிஎல் : மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பும் கங்குலி..! வெளியான புதிய தகவல்
பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி, கடந்த அக்டோபர் மாதம் பதவியிலிருந்து விலகினார்;
புதுடெல்லி,
முன்னாள் இந்திய அணி கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைய உள்ளார்.
பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி, கடந்த அக்டோபர் மாதம் பதவியிலிருந்து விலகினார் இந்த நிலையில் கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐபிஎல் தொடரில் 16வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு கங்குலி டெல்லி அணியின் ஆலோசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.