ஐபிஎல் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
கவுகாத்தி,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை கவுகாத்தியில் எதிர்கொள்கிறது. தொடர்ந்து இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய டெல்லி அணி வெற்றிக்கணக்கை தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.