ஐ.பி.எல். கிரிக்கெட் ; வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகளிடம் உள்ள கையிருப்பு தொகை எவ்வளவு?

வீரர்களை ஏலத்தில் எடுக்க அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ. 38. 15 கோடி உள்ளது.;

Update: 2023-12-19 06:17 GMT

துபாய்,

10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பரஸ்பர வர்த்தக அடிப்படையில் வீரர்கள் பரிமாற்றம் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. வீரர்கள் பரிமாற்றத்தில் ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியில் இருந்து மும்பைக்கும், கேமரூன் கிரீன் மும்பை அணியில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கும் தாவியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த நிலையில் கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் வெளிநாட்டில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

ஐ.பி.எல். ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் ரூ.100 கோடி செலவிட அனுமதி உண்டு. தக்க வைத்துள்ள வீரர்களின் ஊதியம் போக மீதமுள்ள தொகையை ஏலத்தில் பயன்படுத்தலாம்.

வீரர்களை ஏலத்தில் எடுக்க அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ. 38. 15 கோடி உள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.31.4 கோடி இருப்புத்தொகை உள்ளது. அதேபோல் குறைந்தபட்சமாக லக்னோ அணி கையிருப்பில் ரூ.13.15 கோடி உள்ளது.

ஒவ்வொரு அணியும் ஏலத்தில் செலவிட உள்ள கையிருப்பு தொகை விவரம் பின்வருமாறு;-

1.சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 31.4 கோடி

2. டெல்லி கேப்பிட்டல்ஸ் - ரூ. 28.95 கோடி

3. குஜராத் டைட்டன்ஸ் - ரூ. 38.15 கோடி

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 32.7 கோடி

5. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரூ. 13.15 கோடி

6. மும்பை இந்தியன்ஸ் - ரூ. 17.75 கோடி

7. பஞ்சாப் கிங்ஸ் - ரூ. 29.1 கோடி

8. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ. 23.25 கோடி

9. ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.14.5 கோடி

10. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ. 34 கோடி.

Tags:    

மேலும் செய்திகள்