இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 போட்டிகளில் விளையாட தடை.... காரணம் என்ன ?
2சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.;
இந்திய மகளிர் அணி வங்காளதேசம் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது . டி20 தொடரில் 2-1 என இந்திய அணி வென்றது.
ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தவேளையில் 3வது போட்டியில் ஆட்டம் டிராவில் முடிந்தது
வங்காளதேச அணியுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடந்துகொண்ட விதம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்டால் அடித்து உடைத்ததுடன், நடுவர்களையும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.
அவரது இந்த செயல்பாடுகள் ஐசிசி விதிகளை மீறும் செயல் என்பதால் அவர் அடுத்த 2 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி சம்பளத்தில் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்தவும் ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ஹர்மன்பிரீத் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.