ஆசிய விளையாட்டுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டுபோட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-14 20:46 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது. இதில் கிரிக்கெட்டும் ஒன்று. இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கு கிரிக்கெட் அணிகளை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது.

இதன்படி இந்திய கிரிக்கெட் அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த சமயம் உலகக் கோப்பை போட்டி தொடங்க இருப்பதால் முன்னணி வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.

ஆசிய போட்டிக்கான இந்திய ஆண்கள் அணி பெயர் பட்டியல் வருமாறு:- ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ்கான், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங். மாற்று வீரர்களின் பட்டியலில் யாஷ் தாக்குர், சாய் கிஷோர், சாய் சுதர்சன், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டுக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் பங்கேற்கிறது. அந்த அணி வருமாறு:- ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, திதாஸ் சாது, ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னுமணி, கனிகா அகுஜா, உமா ஷெட்டி, அனுஷா பரேட்டி. 

Tags:    

மேலும் செய்திகள்