இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசினர்- தோல்வி குறித்து டீன் எல்கர் கருத்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Update: 2024-01-04 15:49 GMT

image courtesy; AFP

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறுகையில், ' இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசினர். இது உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி. இந்த போட்டியில் நாங்கள் ஒரு நல்ல பாசிட்டிவ்வான எண்ணத்துடன்தான் களமிறங்கினோம். இரண்டு அணிகளிலும் இளம்வீரர்கள் இருந்ததால் மிகச்சிறப்பாக இந்த போட்டி சென்றது. இந்த தொடரை நாங்கள் 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தோம்.

ஆனால் தற்போது 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இந்திய வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். அதோடு மார்க்ரம் இந்த மைதானத்தில் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்தது மிகச்சிறப்பான ஒரு ஆட்டம் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாகவே எங்களது அணி சிறப்பாக செயல்பட்டது. இதுபோன்ற போட்டிகளில் இருந்து நாம் நிறைய விஷயங்களையும், அனுபவங்களையும் கற்றுக்கொள்ள முடியும்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்