இந்தியா - இங்கிலாந்து இடையிலான பயிற்சி போட்டி மழையால் ரத்து

இந்தியா - இங்கிலாந்து இடையிலான பயிற்சி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.;

Update: 2023-09-30 13:14 GMT

கவுகாத்தி,

உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக பங்கேற்கும் அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடுவது வழக்கம். அதன் படி இந்தியா இங்கிலாந்து மோதும் பயிற்சி போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற இருந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது.

இந்நிலையில் திடீரென மழை பெய்ததால்  ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இந்தியா இங்கிலாந்து இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் நிறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்