இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் கிரிக்கெட்: அரைஇறுதி போட்டியில் தென்காசி-மதுரை அணிகள் மோதல்
இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் கிரிக்கெட் போட்டி சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பெபில் சிட்டி மைதானத்தில் நடந்து வருகிறது.
சென்னை,
கட்டுமான பொறியாளர்கள் பங்கேற்கும் இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் (ஐ.சி.பி.எல்.) கிரிக்கெட் போட்டி சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பெபில் சிட்டி மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெறும் அரைஇறுதிப்போட்டியில் தென்காசி சூப்பர் கிங்ஸ்-மதுரை சூப்பர் கிங்ஸ், தஞ்சாவூர் சூப்பர் கிங்ஸ்-கள்ளக்குறிச்சி சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதைத்தொடர்ந்து இறுதிப்போட்டி நடக்கிறது.
பரிசளிப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.