இந்தியா அபார பந்துவீச்சு...சீட்டு கட்டு போல் சரிந்த நியூசிலாந்து விக்கெட்டுகள்...!

நியூசிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது

Update: 2023-01-21 09:12 GMT

Image Courtesy: AFP 

ராய்ப்பூர்,

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாக சில வினாடிகள் யோசித்த பின்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ரோகித் சர்மா எடுத்த முடிவு சரியா? தவறா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், அவர் எடுத்த முடிவு சரிதான் என இந்திய பந்துவீச்சாளர்கள் நிரூபித்தனர். அதாவது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த பின் ஆலெனை ஷமி முதல் ஓவரிலேயே வீழ்த்தினார்.

இதையடுத்து களம் புகுந்த நிகோல்ஸ், டேரில் மிட்செல், கேப்டன் லதாம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரக் கான்வே அகியோரும் இந்திய வேகப்பந்து வீச்சில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 15 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. தற்போது கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய பிரேஸ்வெல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டு வர போராடுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்