சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டி - நாளை முதல் டிக்கெட்டுகள் விநியோகம்
புனரமைக்கப்பட்ட சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக ,புணரமைக்கும் பணி நடைபெற்றது. அத்துடன் 5000 கூடுதல் இருக்கைகளுடன் புதிய ஸ்டான்ட் கட்டப்பட்டது. இந்த நிலையில் ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது
மேலும் புதிய கேலரியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து , கலைஞர் மு.கருணாநிதி என பெயர் சூட்டினார். புதிய ஸ்டாண்ட் திறப்பு விழாவில் சென்னை அணி கேப்டன் தோனி , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
இன்று திறக்கப்பட்ட எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு நடைபெற உள்ளது.
இதற்கான டிக்கெட் நாளை வழங்கப்பட உள்ளது. பார்வையாளர் ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1200 நிர்ணயம் செய்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.