இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான கடைசி டி20 ஆட்டம்: சூப்பர் ஓவரும் 'டை'

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான கடைசி டி20 ஆட்டம் சூப்பர் ஓவரிலும் 'டை' ஆனதால் 2வது சூப்பர் ஓவர் நடைபெற உள்ளது.

Update: 2024-01-17 17:35 GMT

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், 2 போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆட்டம் 'டை' ஆனது.

இதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 1 ஓவரில் ( 6 பந்துகள்) ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 1 ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆட்டம் மீண்டும் டை ஆனது. இதையடுத்து,வெற்றியை தீர்மானிக்க 2வது சூப்பர் ஓவர் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்