கோலியை கேப்டனாக நீடிக்க அனுமதித்து இருந்தால் உலக கோப்பைக்கு இந்தியா 100 சதவீதம் தயாராகி இருக்கும்- ரஷீத் லத்தீப்

விராட் கோலியை கேப்டன் பதவியில் நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராகி இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்.

Update: 2023-08-17 09:57 GMT

லாகூர்,

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வரும் காலங்களில் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை (50 ஓவர்) போன்ற பெரிய தொடர்களில் விளையாட உள்ளது. ஆசிய கோப்பை தொடர் வருகிற 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை பாகிஸ்தான், இலங்கையில் நடக்கிறது. உலக கோப்பை போட்டி அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

இந்நிலையில் விராட் கோலியை கேப்டன் பதவியில் நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்திய அணி உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராகி இருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய அணி நிர்வாகம் பல வீரர்களை வைத்து பரிசோதனை நடத்தி வருகிறது. புதிய வீரர்களை நிலை நிறுத்த அனுமதிக்காததால் தேர்வு முறையில் திணறி வருகிறது. அதனால்தான் சமீபத்தில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்தது. உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது. கேப்டன்களின் மாற்றம் இந்திய அணிக்கு உதவவில்லை என்பதில் சந்தேகம் இல்லை. விராட்கோலியை கேப்டனாக நீடிக்க அனுமதித்து இருந்தால் இந்தியா உலக கோப்பைக்கு 100 சதவீதம் தயாராகி இருக்கும். இவ்வாறு ரஷித் லத்தீப் கூறியுள்ளார்.

கோலிக்கு பின் கடந்த 2 ஆண்டுகளில் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோகித் சர்மா சர்வதேச அளவில் பெரிய வெற்றிகளை பெறவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அரையிறுதியில் தோல்வி, இந்த ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதி போட்டியில் தோல்வியே சந்தித்து உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்