19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை - அட்டவணையை வெளியிட்ட ஐ.சி.சி

19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

Update: 2024-08-18 10:24 GMT

Image Courtesy: @ICC

துபாய்,

19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2023ம் ஆண்டு அறிமுகம் ஆனது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் பதிப்பில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது பதிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்தியா, மலேசியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை (குரூப்-ஏ), இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா (குரூப்-பி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, சமோவா, தகுதி சுற்று அணி (ஆப்பிரிக்கா தகுதி சுற்று) (குரூப்-சி), ஆஸ்திரேலியா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து, தகுதி சுற்று அணி (ஆசியா தகுதி சுற்று) (குரூப்-டி) ஆகிய 16 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டி தொடர் ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் சுற்று அடிப்படையில் நடைபெற உள்ளது.

இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஜனவரி 19ம் தேதி சந்திக்கிறது. தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் ஜனவரி 31ம் தேதியும், இறுதிப்போட்டி பிப்ரவரி 2ம் தேதியும் நடைபெற உள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் நாட்கள் ( அரையிறுதி ஆட்டங்கள்-பிப்ரவரி 1 மற்றும் இறுதிப்போட்டி-பிப்ரவரி 3) அளிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்