ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது.

Update: 2024-08-29 09:29 GMT

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் அஸ்வின் 870 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் 847 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் , இந்திய வீரர் பும்ரா 847 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 788 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளார்.

ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா 444 புள்ளிகளுடன் முதலிடத்திலும் , அஸ்வின் 322 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் நீடிக்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்