ஐசிசி ஒருநாள் தரவரிசை; பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களில் முதல் 5 இடத்திற்குள் 3 இந்திய வீரர்கள்..!

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் சிராஜை பின்னுக்கு தள்ளி தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Update: 2023-11-15 05:54 GMT

image courtesy; ICC

துபாய்,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. அதன் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

அரையிறுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய அணியும், 4-வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் இன்று மோத உள்ளன. 2-வது மற்றும் 3-வது இடங்களை பிடித்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நாளை மோத உள்ளன.

லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் ஐசிசி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார். கோலி 4-வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 5 இடத்திற்குள் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் முகமது சிராஜை பின்னுக்கு தள்ளி தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில் இந்திய வீரர்களான சிராஜ் 2-வது இடத்திலும், பும்ரா 4-வது இடத்திலும், குல்தீப் யாதவ் 5-வது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையைப்போல் பந்து வீச்சாளர்கள் தரவரிசையிலும் முதல் 5 இடத்திற்குள் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல் ரவுண்டர் தரவரிசையில் வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். இதில் இந்திய வீரர் ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்