என்னுடைய 14-15 வயதில் 'எச்ஐவி' பரிசோதனை செய்தேன் - இந்திய கிரிக்கெட் வீரர் கூறிய காரணம்..?

14-15 வயதில் எச்ஐவி பரிசோதனை செய்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் கூறியுள்ளார்.;

Update:2023-03-27 13:49 IST

Image Courtesy : @ChennaiIPL twitter

மும்பை,

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடருக்கு தீவிரமாக தயாரகி வருகின்றனர். ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோதுகின்றன.

இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல் பட உள்ளார். இந்நிலையில் அவர் கூறிய தகவல் தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவ்வாறு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அவர் என்ன கூறியுள்ளார் என்றால் அவருடைய 14-15 வயதில் அவர் எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது,

எனக்கு 14-15 வயது இருக்கும் போது, மணாலிக்குச் சென்று, என் குடும்பத்தாருக்குத் தெரிவிக்காமல் முதுகில் பச்சை குத்தியிருந்தேன். நான் அதை சிறிது காலம் மறைத்து வைத்திருந்தேன். சுமார் 3-4 மாதங்களுக்கு பின்னர் என் தந்தைக்கு நான் பச்சை குத்தியது தெரிந்துவிட்டது. அவர் என்னை அடித்தார்.

டாட்டூவைக் குத்திய பிறகு நான் கொஞ்சம் பயந்தேன். எனக்கு டாட்டு குத்திய ஊசியை வைத்து எத்தனை பேருக்கு குத்தப்பட்டது என்ற தகவல் எனக்கு தெரியவில்லை. எனவே நான் எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டேன். அது இன்று வரை எதிர்மறையாக (நெகட்டிவ்) உள்ளது

நான் குத்திய முதல் டாட்டு ஸ்கார்பியோ (தேள்) என்னுடைய முதுகில் குத்தினேன். ஏனென்றால் அந்த நேரத்தில், அது என் எண்ணமாக இருந்தது. பிறகு நான் அதை ஒரு டிசைன் செய்தேன். என் கையிலும் சிவபெருமான் பச்சை குத்தினேன். அர்ஜூனன் பச்சையும் குத்தி உள்ளேன். ஏனென்றால் அவர் வில் எய்வதில் மிகச்சிறந்தவர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்