நடுவரின் முடிவு குறித்து விமர்சித்ததாக, ஐதராபாத் வீரர் கிளாசனுக்கு 10% அபராதம்!
நடுவரின் முடிவு குறித்து விமர்சித்ததாக கிளாசனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.;
ஐதராபாத்,
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த் போட்டியில் 19-வது ஓவரில் லக்னோ வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் வீசிய 3-வது பந்தை ஐதராபாத் பேட்ஸ்மேன் அப்துல் சமத் எதிர்கொண்டார்.
இடுப்பளவுக்கு மேலாக வந்த அந்த பந்தை சமத் சமாளித்து ஆடினார். பந்து வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு எழும்பி வந்ததால் அதனை கள நடுவர் நோ-பால் என்று அறிவித்தார். ஆனால் நடுவரின் முடிவை எதிர்த்து லக்னோ அணியினர் அப்பீல் செய்தனர். இதனையடுத்து வீடியோவை ஆய்வு செய்த 3-வது நடுவர் பேட்ஸ்மேன் சற்று குனிந்தபடி ஆடியதால் அது நோ-பால் இல்லை என்று தெரிவித்தார்.
இதற்கு அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஹென்ரிச் கிளாசென், சமத் ஆகியோர் தங்கள் அதிருப்தியை தெரிவித்துடன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நடுவரின் முடிவு குறித்து விமர்சித்ததாக கிளாசனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.