தோனியை விட அவர் தான் எப்போதுமே இந்தியாவின் மகத்தான கேப்டன்...விளக்கம் அளித்த இந்திய முன்னாள் வீரர்...!

தோனியை விட அவர் தான் எப்போதுமே இந்தியாவின் மகத்தான கேப்டன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.;

Update: 2023-07-09 13:53 GMT

கோப்புப்படம்

மும்பை,

இந்தியாவின் சிறந்த கேப்டன் யார்? என கேள்வி கேட்டால் பலரது பதில் மகேந்திர சிங் தோனி என்று தான் கூறுவார்கள், ஏனெனில் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி என கோப்பைகளை வென்றுள்ளது.

மேலும் மூன்று விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக உலகில் தோனி திகழ்கிறார். இந்நிலையில் நீங்கள் பல கேப்டன்கள் தலைமையின் கீழ் விளையாடி உள்ளீர்கள் அதில் யார் சிறந்த கேப்டன் கேள்விக்கு பதில் அளித்த இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியதாவது,

இந்தியாவின் சிறந்த கேப்டனாக நான் எப்போதும் கங்குலியை தேர்ந்தெடுப்பேன். குறிப்பாக என்னுடைய ஆரம்ப காலங்களில் நீ தைரியமாக சென்று உன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்து எது நடந்தாலும் உனக்கு ஆதரவு கொடுக்க நான் இருக்கிறேன் என்று அவர் என்னிடம் சொன்னது இன்னும் நினைவுக்கு இருக்கிறது.

உங்களுடைய கேப்டன் அப்படி சொல்வது மிகப்பெரிய விஷயமாகும். ஏனெனில் ஒரு இளம் வீரருக்கு கங்குலி போன்ற ஒரு கேப்டன் மிகப்பெரிய ஆதரவு கொடுக்கும் போது நீங்கள் தைரியமாக இந்தியாவின் வெற்றிக்கு விளையாடுவீர்கள்.

அந்த வகையில் அவர் அற்புதமான கேப்டன். பொதுவாக கேப்டன்ஷிப் என்பது அனைத்திற்கும் பொறுப்பாக நீங்கள் முன்னின்று சரியான வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாகும். அதற்கு அடையாளமாக செயல்பட்ட கங்குலி இந்திய அணியை உருவாக்கினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்